யாழ்ப்பாணம் குருநகர் சென். றோக் வித்தியாலய சமூகத்தினர் தமது பாடசாலையின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடினார்கள். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று மாலை யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் பணிமனைக்கு பாடசாலை அதிபர் ஏ.மரியதாசன் தலைமையில் வருகைதந்த பாடசாலை சமூகத்தினர் தமது வித்தியாலயத்தை தரமுயர்த்துமாறு கேட்டுக் கொண்டதுடன் பாடசாலைக்கு நிரந்தர குடிநீர் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டனர். இச்சமயம் அங்கு சமூகமளித்திருந்த யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களுடன் உரையாடிய அமைச்சர் அவர்கள் பாடசாலைக்கு உடனடியாக குடிநீர் விநியோகத்தை வழங்குமாறு பணிப்புரை வழங்கினார். மேலும் கல்வித் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சின் ஊடாக உரிய வசதிகளை மேற்கொண்டு தருவதாக தெரிவித்த அமைச்சரவர்கள் இதன்மூலம் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெறுவதன் மூலம் பாடசாலையின் தரத்தினை உயர்த்த முடியும் எனவும் தெரிவித்துக் கொண்டார்.
சென். றோக் வித்தியாலய சமூகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடிய சமயம் யாழ்.மாநகர சபை உறுப்பினர் எஸ்.விஜயகாந்த் பாடசாலை சிரேஷ்ட ஆசிரியர் ஜீ. கெனத் மரியன் பாடசாலை அபிவிருத்தி சபைச் செயலாளர் வே.சுப்பிரமணியம் உறுப்பினர் பெர்ணான்டோ பீலிக்ஸ் ஆகியோருடன் பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’