இலவசக் கல்வி காரணமாக இன்று அநேகர் கல்வியை மூலதனமாகக் கொண்டு வாழ்வில் உயர்வடைகின்றனர் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா நேற்று தெரிவித்தார்.
கண்டி பெண்கள் உயர் கல்லூரியின் 131ஆவது வருட பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா ஆரம்பித்த இலவசக் கல்வி பின்னர் பலரால் திசை மாற்றப்பட்டு விட்டது.
ஆசிரியர்களின் தியாகம், சிறந்த ஆளுமையுள்ள அதிபர் - பிரதி அதிபர், நன்றியுள்ள பழைய மாணவர், திறமையும் தெளிவும் சமூக நோக்கும் கொண்ட அரசியல்வாதிகள் ஆகிய ஐந்து பிரிவினரும் ஒன்றிணைந்தால் தான் இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் சீராக்க முடியும்.
பரிசளிப்பு வைபவங்கள் மூலம் மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் வழிகாட்டப்படுகின்றனர். எதிர்காலத்திற்கேற்றவாறு திட்டமிடப்படுகின்றனர்.
எனவே இன்றோ நாளையோ பாடசாலையை விட்டு நீங்கும் மாணவர்களை விட ஆரம்ப வகுப்பு மாணவர்களை இணைத்துப் பரிசளிப்பு வைபவங்களை நடத்த வேண்டும். அது அவர்கள் வளரும் போது ஒரு ஊக்குவிப்பாக மாறும்" என்றார்.
மாணவர்களுக்கு அமைச்சர் பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். கல்லூரி அதிபர் திருமதி மல்காந்தி அபயகுணசேகர வரவேற்புரையாற்றினார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’