ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் இரண்டாவது பதவிப்பிரமாணம் இன்று நடைபெறவுள்ள நிலையில் அவருக்கு நல்லாசிகள் வேண்டி பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பிரதி அமைச்சர் வீரக்குமார திசநாயக்க அவர்களும் சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு பம்பலப்பிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதி அமைச்சர் வீரக்குமார திசநாயக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆலோசகர் திருமதி ஜெகராசசிங்கம் யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் அமைச்சுக்கு கீழான பனை அபிவிருத்திச் சபை தேசிய வடிவமைப்புச் சபை இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை தேசிய கைப்பணிச் சபை உள்ளிட்டவற்றின் துறைசார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி கோயிலின் பிரதம குருக்கள் பிரம்மஸ்ரீ நாகராஜக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மஹிந்த ராஜபக்~ அவர்கள் இரண்டாவது பதவியேற்புக்காக இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு தெய்வ ஆசிவேண்டி இந்த சிறப்பு பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவருடைய அரசு தொடர்ந்தும் மக்களுக்கு நல்ல பல சேவைகளைச் செய்ய வேண்டுமென்றும் அப்பணியை ஜனாதிபதி அவர்கள் திறம்படச் செய்வார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் சகல சௌபாக்கியமும் பெற்று நீடுழிகாலம் வாழ வேண்டுமென்றும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து பிரதி அமைச்சர் வீரக்குமார திசநாயக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா பிரம்மஸ்ரீ நாகராஜக்குருக்கள் ஆகியோர் ஜனாதிபதிக்கு இறையாசி வேண்டி தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’