வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 21 நவம்பர், 2010

ஜனாதிபதி தனது 2வது பதவியேற்பின்போது தமிழ்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமான விடயங்களை அறிவிக்காமை ஏமாற்றமளிக்கிறது! – மக்கள் விடுதலைக் கழக தலைவர்

னாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பின்போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமான விடயங்களை அறிவிப்பார் என நாம் எதிர்பார்த்தோம். அத்துடன் தமது பிரச்சினைக்குத் தீர்வு காணமாட்டாரோ என்று தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட சந்தேகத்தையும் அவராகவே உறுதி செய்துள்ளார் என்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (PLOTE) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் ஒரு விடயமாக இது அமைந்து விட்டது. அவரின் முக்கியத்துவமிக்க உரையில் தமிழ் மக்கள் தொடர்பில் எதனையும் தெரிவிக்காவிட்டாலும் எதிர்காலத்தில் இதற்கான தீர்வை அவரே வழங்க வேண்டும். அது அவரது கடப்பாடு. அந்த நம்பிக்கையிலேயே நாம் உள்ளோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடாதென்ற நிலைப்பாட்டுடன் ஜனாதிபதி செயற்படுகிறாரோ என்ற ஐயம் தமிழ் மக்கள் மத்தியில் தற்போது எழுந்தாலும் இந்த நாட்டின் தலைவர் என்ற வகையில் அந்த மக்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே தீர்வு காண வேண்டும். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
எமது கட்சியைப் பொறுத்த வரையில் இன்றைய ஜனாதிபதியே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என்ற நம்பிக்கையில் அவருக்கு வாக்களித்திருந்தோம் என்பதனையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். மேலும் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இனப்பிரச்சினைக்கான தீர்வை ஜனாதிபதி காணவேண்டும் என்ற அழுத்தத்தை வழங்க வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டு செயற்பட்டால் அதனை ஜனாதிபதியால் தட்டிக் கழிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’