வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 நவம்பர், 2010

யுத்தத்துக்கு புலிகளே காரணம் என தமிழ் மக்கள் நம்புகின்றனர் - டாக்டர் சிவபாலன்

2002 ஆண்டுக் காலப்பகுதியில் சமாதானம் ஏற்படுத்துவதற்கு கிடைந்த சந்தர்ப்பத்தை தவற விட்டதன் பின்னர் ஏற்பட்ட யுத்ததிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் விதலைப் புலிகளே பொறுப்பு என தமிழ் மக்கள் நம்புவதாக இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் எஸ்.சிவபாலன் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை மாலை கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் பேதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த வைத்தியர் எஸ்.சிவபாலன் கூறியதாவது :-

"இந்த யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான உயிர் மற்றும் உடமைகளை அழிந்துள்ளன. அதுமாத்திரமல்லாமல் வன்னி பகுதி முழுமையாக அழிவடைந்துள்ளது. இவ்வளவு பாரிய அழிவுகளை ஏற்படுத்திய இந்த யுத்ததின் மூலம் எமது சமூகத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் மக்கள் உள்ளார்கள்.

தனிநாடு கோரிக்கையை முதலில் ஏற்படுத்தியது தமிழ் கட்சிகளே. அதனையடுத்தே சிறு ஆயுத குழுவாக உருவாகிய விடுதலை புலிகள் இயக்கம், பின்னர் பாரிய இயக்கமாக மாறியது. இந்த நிலையில் விடுதலை புலிகளின் போராளிகளுக்கு இந்தியாவிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இறுதிக்கட்ட யுத்ததின் போது விடுதலை புலி உறுப்பினர்கள் ஆயுதங்களை கலைந்துவிட்டு மக்களுடன் மக்களாக இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள முற்பட்டார்கள்" என்றார்.

இந்நிலையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்களால் வைத்தியர் எஸ்.சிவபாலனிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதன் விபரம் வருமாறு :-



ஆணைக்குழு: இறுதிக்கட்ட யுத்ததின் போது முள்ளிவாய்க்கல் வைத்தியசாலையின் நிலமை எவ்வாறிருந்தது?

சிவபாலன்: பல பிரச்சினைகளுக்கு மத்தியில் செயற்பட்டது. தற்காலிகமாக பாடசாலை கட்டிடத்திலேயே இயங்கிது. ஐ.சி.ஆர்.சி ஊடாக மாத்திரம் மருந்து பொருட்கள் கிடைத்தன.

ஆணைக்குழு: காயப்பட்டவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளித்தீர்கள்?

சிவபாலன்: காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகளை மேற்கொண்டோம். பாரியளவில் காயமடைந்தவர்களை ஐ.சீ.ஆர்.சீ.யின் உதவியுடன் திருகோணமலைக்கு அனுப்பினோம். இவர்களை அனுப்புவதற்கு புலிகளின் அனுமதி பெறவேன்டியிருந்தது. ஐ.சீ.ஆர்.சீ.யின் கப்பலினுடாக காயப்படாத மக்களும் திருகோணமலைக்கு செல்ல முற்பட்டனர். எனினும் விடுதலை புலிகள் அதற்கு அனுமதிக்கவில்லை.

ஆணைக்குழு: விதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இராணுவ கட்டுப்பாடு பகுதிக்கு சென்ற பொதுமக்களை விடுதலைப் புலிகள் சுட்டார்கள் என்பது உண்மையா?

சிவபாலன்: இறுதிக்கட்ட யுத்ததின் போது கடனீரேரி ஊடாக மக்கள் விதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இராணுவ கட்டுப்பாடு பகுதிக்கு நடு இரவில் சென்றனர். இரு பகுதிக்கும் இடையிலான தூரம் 200 தொடக்கம் 300 மீற்றர் ஆகும். இதன் ஆழம் கழுத்து பகுதி வரையிருந்தது. புலிகளின் பகுதியில் நடப்பது இராணுவத்தினருக்கு அறிய முடியாது. நடு நிசியில் மக்கள் சென்ற போது புலிகள் வானை நோக்கி சுட்டார்கள். அதனையடுத்து இராணுவத்தினரும் வானை நோக்கி சுட்டனர். இதனால் மக்கள் அச்சமடைந்து திரும்பி வந்தார்கள். சிலசமயம் இராணுவ கட்டுப்பாட்டுக்கு சென்ற மக்களை விடுதலை புலிகள் சுட்டுள்ளனர்.

ஆணைக்குழு: விடுதலை புலிகள் வைத்தியசாலைக்கு அருகிலா இருந்தார்கள்?

சிவபாலன்: வைத்தியசாலையிலிருந்து 200 தொடக்கம் 300 மீற்றர் தூரத்தில் இருந்தார்கள்.

ஆணைக்குழு: வைத்தியசாலைக்கு ஷெல் குண்டுகள் வீசப்பட்டதா?

சிவபாலன்: இராணுவத்தினால் இரண்டு மூன்று தடவைகள் வைத்தியசாலைக்கு ஷெல் போடப்பட்டன. எனினும் வைத்தியசாலை வளவினுள் போடப்பட்டதே தவிர வைத்தியசாலை கட்டிடத்தினுள் அவை விழவில்லை.

ஆணைக்குழு: முள்ளிவாய்க்கள் வைத்தியசாலையில் விடுதலைப் பு லி உறுப்பினர்களுக்கும் சிகிச்சை அளித்தீர்களா?

சிவபாலன்: விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு 2009ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் சிகிச்சை அளித்தோம். அப்போது நாங்கள் வைத்தியர் நோயாளி என்ற உறவிலேயே செயற்பட்டோம்.

ஆணைக்குழு: விடுதலை புலிகளின் வைத்தியசாலை கட்டமைப்பு எவ்வாறிருந்தது?

சிவபாலன்: சிறந்த முறையில் இயங்கியது. அவர்களின் வைத்தியசாலை தனியார் வைத்தியசாலை போன்றே இயங்கியது. 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட சமாதானத்தின் போது அவர்கள் தேவையான மருந்துகளை சேகரித்து வைத்திருருந்தனர். அத்துடன் தேவையேற்படும் மருந்துகளை கொழும்பிலிருந்தே கொள்வனவு செய்தார்கள்.

ஆணைக்குழு: விடுதலைப் புலிகளின் வைத்தியசாலைகளில் நீங்கள் கடமையாற்றியுள்ளீர்களா?

சிவபாலன்: விடுதலைப் புலிகளின் வைத்தியசாலையில் கடமையாற்றியுள்ளேன். எனது சேவைக்கு அவர்கள் பணம் வழங்கினார்கள்.

ஆணைக்குழு: விடுதலைப் புலிகளின் வைத்தியசாலையில் பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதா?

சிவபாலன்: பொதுமக்களுக்கு பணம் வழங்கியே சிகிச்சை பெற்றார்கள்.

ஆணைக்குழு: விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வைத்தியசாலை இயங்குவதற்கு உதவியது யார்?

சிவபாலன்: வைத்தியசாலைக்கு தேவையான அனைத்தையும் அரசாங்கமே வழங்கியது.

ஆணைக்குழு: விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வைத்தியசாலையில் எவ்வளவு கால கடமையாற்றினீர்கள்?

சிவபாலன்: 1996ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை முள்ளிவாய்க்கல் வைத்தியசாலையிலிருந்து கடமையாற்றியுள்ளேன். இக்காலப்பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 20இ000 மக்களுக்கு சிகிச்சையளித்துள்ளேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’