வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 நவம்பர், 2010

ஜனாதிபதி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துப் பேச தமிழ்க்கட்சிகளின் அரங்கம் தீர்மானம்.

டக்கு கிழக்கு பகுதிகளில் மீள்குடியேறிவரும் மக்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுடனும் இலங்கைக்கு வருகைதரவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா அவர்களுடனும் சந்திப்புக்களை மேற்கொள்ள தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிமனையில் நேற்றிரவு இடம்பெற்ற தமிழ்க்கட்சிகளின் அரங்க சந்திப்பிலேயே மேற்கண்ட முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் வடக்கு கிழக்கு பகுதிகளில் தற்போது மீள்குடியேறிவரும் மக்கள் எதிர்நோக்கிவரும் வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அப்பகுதிகளில் நிலவும் நெருக்கடி நிலைகள் ஆகியன தொடர்பில் இருவருக்கும் எடுத்து விளக்குவது எனவும் அதுதொடர்பிலான இறுதிவரைபு கொழும்பிள்ள தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி அவர்களின் வாசஸ்தலத்தில் இன்றையதினம் புதன்கிழமை தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தினால் பிரேரிக்கப்பட்ட உபகுழு உறுப்பினர்களின் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரத்தில் இந்திய அரசின் காத்திரமான பங்களிப்பினைக் கருத்திற்கொண்டும் இவ்வார இறுதியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் இந்திய அரசாங்கம் தற்சமயம் வழங்கிவரும் பங்களிப்பினை கருத்திற்கொண்டும் மேற்படி சந்திப்பானது அவசியமானது என இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே இம்மாத இறுதிக்குள்ளாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுடனும் மக்களது மீள்குடியேற்றம் தொடர்பிலும் தற்சமயம் மக்கள் எதிர்நோக்கும் அத்தியாவசிய மற்றும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கும் தமிழ்க்கட்சிகளின் அரங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இன்றைய சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி மற்றும் ஆர்.சங்கையா தமிழ் தேசிய விடுதலை முன்னணி சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் என்.சிறிகாந்தா மற்றும் எஸ்.விமல்ராஜ் புளொட் அமைப்பின் சார்பில் த.சித்தார்த்தன் மற்றும் ஆர். ராகவன் நாபா ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் தி.சிறிதரன் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் ந.குமரகுருபரன் சிறி ரெலோ சார்பில் பி.உதயராசா மற்றும் ஜீ.சுரேந்திரன் ஈரோஸ் முக்கியஸ்தர் அங்கயற்கன்னி இலங்கை ஏதிலியர் அமைப்பின் சார்பில் எஸ்.சி.சந்திரஹாசன் பீ.மாணிக்கவாசகர் மற்றும் றெமி பெரேரா தமிழர் மகா சங்கத்தின் சார்பில் த.கோபாலகிருஸ்ணன் மனித உரிமைகள் இல்ல பிரதிநிதிகள் ஈ.பி.டி.பி.யின் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அ.இராசமாணிக்கம் மு.சந்திரகுமார் ஆகியோர் தமிழ் அரங்கத்தின் நேற்றைய சந்திப்பில் பங்குகொண்டமை குறிப்பிடத்தகக்து.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’