வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 நவம்பர், 2010

இலங்கை பெண் இந்தியாவில் தற்கொலை; சீ.பீ.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் பணிப்பு

ந்திய பொலிஸார் சிலரினால் வல்லுறவுக்கும் வன்முறைக்கும் ஆளான தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக இலங்கையின் பெண் அகதியொருவர் கூறியதற்கு பதிலளிக்குமாறு தமிழ்நாடு மாநில உள்துறை செயலாளர், பொலிஸ் பணிப்பாளர் நாயகம், மத்திய புலனாய்வு பணியக பணிப்பாளர் ஆகியோருக்கு நீதிபதி கே.சுகுணா பணித்துள்ளார்.

26 வயதான இலங்கை அகதிப் பெண், கரூர் மாவட்டத்தில், பொலிஸாரினால் தாக்கப்பட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபின் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இறந்த பெண்ணின் தாய், மத்திய புலனாய்வு பணியகம் இதனை விசாரிக்க வேண்டும் என ஆணைகோரும் மனுவை சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மார்ச் 7ஆம் திகதி அகதி முகாமிலிருந்த இவரது மகளின் வீட்டுக்கு வந்த பொலிஸார் சிலர் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் அடைக்கப்பட்டிருந்த இவரது கணவன் இவரை பார்க்க விரும்புவதாக கூறி நீதிமன்றம் விதித்திருந்த நடைமுறை அனுசரிக்காது தாயையும் மகளையும் வானில் அழைத்துச் சென்றனர். இவர்கள் காரூரில் முன்பு அறிந்திராத ஒரு இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இடையில், தனது மகளை மட்டும் தனியாக பிரித்தெடுத்து தூரவுள்ள கட்டிடத்திற்குக் கொண்டுச்சென்றதாக பத்மாவதி குற்றம் சாட்டுகிறார். பின்னர் தாயும் மகளும் ரேயனூர் முகாமருகில் விடப்பட்டனர்.
அன்றே மகள் தனக்கு தீமூட்டி தற்கொலை செய்துக் கொண்டார். மூன்றுபொலிஸார் மகளை பாலியல் பலவந்தம் செய்ததனை தொடர்ந்து, அவர் அதிதீவிரமான முடிவை மேற்கொண்டதை தாயார் தெரிந்துக்கொண்டார்.
இறந்தவரின் வாக்குமூலத்தின் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. விசாரணை எதுவும் நடக்கவில்லை. உயர் அதிகாரிகளுக்கு முறையிட்டு பலன் ஏதுமில்லை என பத்மாவதி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’