கடந்த வருடம் மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் தடைசெய்யப்பட்ட இயக்கமான லக்ஸர் இ ஜாங்வியின் செயற்பாட்டாளர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை பாகிஸ்தான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் லாகூரை சேர்ந்த குவாறி ஒமர் ஆபாப் என இனங்காணப்பட்டுள்ளார்.
குவாறி ஒமர் ஆபாப், லக்ஸர் ஜாங்வியின் செயற்பாட்டாளராக இருந்தபோதும் பாகிஸ்தானில் செயற்படும் ரேறிக், தலிபானுக்காகவும் வேலை செய்துள்ளார்.
இவர் கைது செய்யப்பட்டபோது இவரிடமிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பாகிஸ்தான் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
ஆயுதம் தாங்கிய குழுவொன்று இலங்கை கிரிக்கெட் அணியினர் சென்ற வாகன தொடரணிமீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில் எட்டு பேர் கொல்லப்பட்டதுடன் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உட்பட 20 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’