பாரம்பரிய கைத்தொழில்கள் சார்ந்து தேசிய கொள்கையொன்று வகுக்கப்படும் என்றும் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு இலகு கடன் வசதிகள் வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்படுமென்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அறிவித்துள்ளார்.
இன்று மாலை கண்டி பேராதனையில் வைத்து பாரம்பரிய கைத்தொழிலாளர்களையும் சிறுதொழில் முயற்சியாளர்களையும் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சரவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா அவர்களது ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கண்டி மாவட்டத்தில் பாரம்பரிய கைத்தொழில்களுக்குப் பெயர் பெற்ற உடுநுவர பகுதி சார்ந்த பித்தளை வெள்ளி தங்கம் தோற்கருவிகள் உட்பட பல்வேறு கைத்தொழில்கள் சார்ந்த உற்பத்தியாளர்களும் சிறுதொழில் முயற்சியாளர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு தங்களது தொழில்சார் பிரச்சினைகளை முன்வைத்தனர்.
இவர்களது பிரச்சினைகள் அனைத்தையும் உள்வாங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு வெகுவிரைவில் நீக்கப்பட்டு பாரம்பரிய கைத்தொழில்கள் முன்னேற்றப்படுமெனத் தெரிவித்தார். அனுமதிப் பத்திரங்கள் பெறுவது முதலான சிக்கல்கள் அனைத்தும் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்க்கப்படுமென்றும் எமது அமைச்சின் நோக்கத்தின்படி சிறுதொழில் முயற்சியாளர்களது முன்னேற்றம் மத்தியதர தொழில் முயற்சியாளர்கள் வரையிலும் மத்தியதர தொழில் முயற்சியாளர்களது முன்னேற்றம் பாரிய தொழில் முயற்சியாளர்கள் வரையிலும் முன்னேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் உயரதிகாரிகள் மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சர் அமைச்சின் செயலாளர் அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’