அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன இந்த மாதம் 26ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதவானால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உயர் கல்வி அமைச்சின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி உதுல் பிரேமரட்ன கைதுசெய்யப்பட்டிருந்தார்.
வோர்ட் பிளேஸிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 21 பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் வழக்குரைஞர் குணரட்ன வன்னிநாயக்க தலைமையில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான உதுல் பிரேமரட்ன பிணையில் விடுதலை செய்யப்படாமல் சுமார் இரண்டு வாரங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக உதுல் பிரேமரட்ன தரப்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
சொத்துக்குகளுக்கு சேதம் விளைவித்தார் என்றும் சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் என்றும் உதுல் பிரேமரட்னவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் கூறினார்.
இரண்டாவது குற்றச்சாட்டுக்கு பிணை வழங்கமுடியும், விசேட சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்திற்கு சொந்த தீர்மானத்தின்படி பிணை வழங்குவதற்கான அதிகாரமுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’