வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு இன்று காலை சென்ற பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு சிறப்புப் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர் ஆலய வளாகத்தில் அங்காடி வர்த்தகம் செய்யும் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான வியாபார நிலையங்களை கையளித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கடந்த காலங்களில் ஆலய வழிபாட்டிற்கு வரும் மக்கள் பூசை வழிபாட்டிற்குரிய பொருட்களுக்கும் இதர பொருட்களுக்கும் வியாபார நிலையங்களை நாடிச்செல்லும் நிலையில் கடலை உட்பட இதர வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நோக்காகக் கொண்டு அமைச்சர் அவர்கள் அங்காடி வியாபாரிகளுக்கென புதிதாக இடம் ஒன்றினை ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தார்.
இதன்பிரகாரம் 12 பொதுக்கடைகளையும் 30 கச்சான் கடைகளையும் சீட்டெடுப்பின் மூலம் வியாபாரிகள் தமது கடைகளை தெரிவு செய்தனர்.
இதனடிப்படையில் தமக்கு இட ஒதுக்கீடு மேற்கொண்டு தந்தமைக்காக வியாபாரிகள் அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்த அதேவேளை வியாபாரப் பகுதியையும் சுற்றாடலையும் சுத்தமாக பேணுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்காடி வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் அப்பகுதியில் தபாற்கந்தோர் ஒன்றும் ஆலயத்திற்கு நேர்த்திக் கடனை நிறைவு செய்வதற்காக வரும் பக்தர்களின் வசதி கருதி சிகைஅலங்கரிப்பு நிலையம் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கேணல் பீரிஸ் கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் பண்டாரா மாங்குளம் தலைமை பொலிஸ் அதிகாரி அமரசிங்க புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தலைவர் செபமாலை திஸ்ஸவீரசிங்கம் (லிங்கேஸ்) உபதலைவர் சஞ்சீவ் மகேந்திரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபைச் செயலாளர் ஆனந்தகுமார் திருமுறிகண்டி தேவஸ்தான முகாமையாளர் புவனகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’