வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 9 நவம்பர், 2010

திருட்டு வீ.சி.டி.க்கள் கைப்பற்றல்

ண்மையில் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படத்தின் திருட்டு இறுவெட்டுக்களை விற்பனை செய்த ஐந்து பேரை போதிராஜ மாவத்த, குணசிங்கபுர ஆகிய இடங்களில் குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று கைது செய்தனர்.

பெருந்தொகையான திருட்டு வீ.சீ.டிகளையும் டீ.வீ.டிகளையும் இவற்றை தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்காக தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் 3 மில்லியன் (இந்திய) ரூபா செலவில் உத்தமபுத்திரன் என்ற படத்தை இறக்குமதி செய்திருந்தது.
தீபாவளியன்று வெளியிடப்பட்ட இந்த படத்தின் திருட்டு பிரதிகள் மூன்று நாட்களுக்குள்ளேயே சந்தைக்கு வந்துவிட்டது என இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன பிரதி பொது முகாமையாளர் லங்கா தத்ம விக்கிரம கூறினார்.
இப்படத்தின் முழு உரிமையும் இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கே உள்ளது. ஆகவே நாம் புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் திருட்டு வீ.சி.டி விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம் என்றார் அவர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’