அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் உதுல் பிரேமட்ன பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உயர்கல்வி அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
உதுல் பிரேமரட்ன மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிரூபிக்கப் போதிய ஆவணங்கள் இல்லாததன் காரணமாக அவருக்கு பிணை வழங்க வேண்டுமென உதுல் பிரேமரட்ன சார்பில் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி கேட்டுக் கொண்டார்.
எனினும் உதுல் பிரேமரட்னவுக்குப் பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி மறுப்புத் தெரிவித்தார். பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் உதுல் பிரேமரட்னவிற்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு பிணை வழங்க கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நேற்று முன்தினம் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கிய 21 பல்கலைக்கழக மாணவர்களையும் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’