வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 3 நவம்பர், 2010

புதிய உலக சாதனை...

அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்களான ஏஞ்சலோ மத்திவ்ஸ், லஷித் மலிங்க ஆகியோர் புதிய உலக சாதனையொன்றைப் படைத்துள்ளனர்.
  இன்று மெல்பர்னில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் 240 ஓட்டங்களை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய போது 9ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த இவ்விருவரும் 132 ஓட்டங்களைக்குவித்தனர். இது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் புதிய உலக சாதனையாகும்.
27 வருடங்களுக்கு முன்னர் 1983ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டிகளின்போது ஸிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய அணி வீரர்களான கபில்தேவ் - சயீட் கிர்மானி ஆகியோர் 126 ஓட்டங்களைப் பெற்றமையே இதற்குமுன் 9ஆவது விக்கெட்டுக்கான உலக சாதனையாக இருந்தது.
இச்சாதனையை இன்று மத்திவ்ஸும் மலிக்கவும் முறியடித்தனர். இவர்கள் ஜோடி சேர ஆரம்பித்தபோது இலங்கை அணி 107 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 8 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. எனினும் இறுதியில் இலங்கை ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்றது.
ஏஞ்சலோ மத்திவ்ஸ் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி வீரர்கள் வெற்றிக்களிப்பில் குதூகலிப்பதையும் புதிய உலகசாதனை படைந்த மத்தீவ் - மலிங்க ஜோடியையும் படங்களில் காணலாம்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’