பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் நிகழ்வுகளில் பங்குகொள்ளும் முகமாக மன்னாருக்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உப்புக்குளம் சித்தி விநாயகர் சிறி ராஜராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற வரவேற்பிலும் வழிபாடுகளிலும் பங்குகொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
இன்று காலை (31) மன்னாருக்கு வருகை தந்த அமைச்சரவர்கள் மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள உப்புக்குளம் சித்தி விநாயகர் சிறி ராஜராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானத்திற்கு சென்ற போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் தோழர் லிங்கேஸ் தலைமையில் கோவில் குருக்களும் பொதுமக்களும் மலர்மாலை அணிவித்து மேளதாள இசையுடன் வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து தேவஸ்தான பிரதம குருக்கள் பிரம்மசிறி எஸ்.மகேஸ்வர குருக்கள் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசிகளையும் வழங்கினார். இச்சமயம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் தோழர் புரட்சிமணியும் உடனிருந்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’