வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 13 நவம்பர், 2010

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் மீது முதலமைச்சர் குழுவினர் தாக்குதல்? _

ட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் பிரபா மற்றும் அருமைலிங்கம் ஆகியோர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குழுவினரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும், அவருடன் கூடவே எட்டு வாகனங்களில் வந்த குண்டர்கள் ஆகியோர் மாநகர சபை உறுப்பினர்களை தாக்கியதாக மட்டக்களப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கல் தெரிவிக்கின்றன.
இருவரும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீதாவின் வீட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே தாக்கப்பட்டுள்ளனர். பிரபா மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஈரோஸ் சார்பாக தெரிவாகியிருந்ததும், அருமைலிங்கம் சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் பிரதிநிதியாக செயற்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
தாக்குதலின் காரணமாக படுகாயமடைந்த இருவரும் தற்போதைக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஓரளவுக்கு நிலைமை தேறியுள்ளதாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’