குறிகட்டுவான் நெடுந்தீவு பயணிகளின் போக்குவரத்தினை கருத்தில் கொண்டு பாரிய படகொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இப்படகு நிர்மாணப் படகினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
குறிகட்டுவான் நெடுந்தீவு பயணிகளின் நன்மை கருதி புதிய படகொன்றின் அவசியத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு வந்திருந்தார்.
இதன் பயனாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் இப்படகு கொழும்பு துறைமுகத்தில் டொக்யார்ட் நிறுவனத்தின் மூலம் 800 இலட்சம் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இப்படகின் நிர்மாணப் பணிகள் பாதி பூர்த்தியாகியுள்ள நிலையில் மீதிப் பணிகள் வெகுவிரைவில் முடிவுக்கு வரும் என தெரியவந்துள்ளது. இப்படகின் மூலம் குறிகட்டுவான் நெடுந்தீவு இடையிலான பயணிகள் மிகுந்த பயனை அடைவர் என்பதுடன் இப்படகு இலவசப் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் யாழ்மாவட்ட ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’