யுத்தம் முடிவடைந்த நிலையிலும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை நிலவுகிறது என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சிமளிக்கையில் கூறினார்.
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளிக்கையிலேயே தயா மாஸ்டர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் சாட்சியமளிக்கையில்இ 'தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்றை முன்வைக்க முடியுமனால் இனப்பாகுபாட்டை இல்லாமல் செய்ய முடியும். அரசியல் தீர்வுமுயற்சிகளை நீடித்துக்கொண்டு செல்லாமல் உடனடியாக நிரந்தர அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும்.
இலங்கைக்குள் சாத்தியமான தீர்வுதிட்டம் குறித்து அரசு யோசித்துக் கொண்டிருப்பதைவிட அத்திட்டத்தை அமுல்படுத்துவது அவசியம்.
அதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்றார்.
தான் முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் முக்கிய நபரொருவராக விளங்கிய போதிலும் தற்போது மனநிறைவுடன் சமூகத்தில் பணியாற்றக்கூடியதாக உள்ளதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்தார்.
ஊர்காவற்துறையில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது ஊர்காவற்துறை, மண்கும்பான், நாரந்தனை முதலான இடங்களைச் சேர்ந்த மக்கள் சாட்சியமளித்தனர். பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு, காணாமல் போன தமது உறவினர்களை ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’