யாழ்.போதனா வைத்தியசாலையில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட சலுகைகளுடன் சம்பள உயர்விற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இம் மாதம் 14ம் திகதி முதல் புளோர் கெயார் என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான யாழ்.மருத்துவமனையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் சம்பள உயர்வு கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அன்றைய தினம் அங்கு சென்ற அமைச்சர் அவர்கள் பணியாளர்களுடன் கலந்துரையாடி சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை யெடுக்கப்படுமென்றும் பணிப்புறக்கணிப்பை நிறுத்தி கடமைகளுக்குத் திரும்புமாறும் கேட்டுக் கொண்டதற்கிணங்க பணிப்புறக்கணிப்பு உடனடியாகவே நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் இன்று மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்ட அவர் சுத்திகரிப்பு பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.
அதன் பிரகாரம் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட நாளாந்த சம்பளமாக 425 ருபா வழங்கப்படுமெனவும் அத்துடன் ஊழியர் சேமலாபநிதி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படவேண்டுமென்றும் தெரிவித்த அமைச்சர் அவர்கள் மருத்துவமனையின் சுத்தம் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு அனைவரும் கடமையுணர்வுடன் பணியாற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’