வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 1 நவம்பர், 2010

மன்னார் மேற்கு பனை தென்னை வள அபிவிருத்திச் சங்க தலைமையக பணிமனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்துவைப்பு

ன்னார் மேற்கு பேசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பனை தென்னை வள அபிவிருத்திச் சங்கத்தின் தலைமையக பணிமனைக் கட்டடம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (31) அப்பகுதிக்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஏனைய அதிதிகளும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் புதிய பணிமனைக் கட்டட வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு நிகழ்வுகளின் ஆரம்பமாக தேசியக் கொடியினை அமைச்சரவர்களும் கூட்டுறவுக் கொடியினை மன்னார் கூட்டுறவு உதவி ஆணையாளர் மங்கலதாஸ்சும் ஏற்றிவைத்ததை அடுத்து மன்னார் மேற்கு பனை தென்னை வள அபிவிருத்திச் சங்கத்தின் தலைமையக பணிமனைக் கட்டடடத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக நாடாவினை வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சங்கப் பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள கிராமிய வங்கியும் அமைச்சரவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிதிகளினால் மங்கல விளக்கு ஏற்றப்பட்ட நிலையில் சங்கத் தலைவர் பிலிப்பு தற்குரூஸ் தலைமையிலும் மன்னார் சிவசுப்பிரமணிய தேவஸ்தான குருக்கள் பிரம்மசிறி தர்மகுமார சர்மாவின் ஆசியுரையுடனும் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தலைமையுரை நிகழ்த்திய சங்கத்தலைவர் ஓலைத்தொடுவாய் முதல் தலைமன்னார் வரையிலான மன்னார் மேற்கு பிரதேசத்தில் வதியும் பனை தென்னை வளத்தினை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் மன்னார் மேற்கு பனை தென்னை வள அபிவிருத்திச் சங்கத்தில் அங்கத்தவர்களாக உள்ள நிலையில் இச்சங்கத்தின் சொந்த முதலீட்டில் தலைமைப் பணிமனையானது புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததோர் நிகழ்வு எனக் குறிப்பிட்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக பதவிவகிக்கும் நிலையில் எமது பணிகளும் முயற்சிகளும் மேம்பாடடைய அமைச்சரவர்கள் நிச்சயம் உதவிகள் செய்வார் எனக்கூறியதோடு தமது கோரிக்கைகளையும் தெரியப்படுத்தினார்.

தலைமையுரையினை அடுத்து மன்னார் அரசாங்க அதிபர் நீக்களஸ்பிள்ளை மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல் மன்னார் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் நசீம் முன்னாள் மன்னார் கூட்டுறவு உதவி ஆணையாளரும் தற்போதைய முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளருமான சீ.தவராசா மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் மங்கலதாஸ் வடமாகாண மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளர் கிறிஸ்டி ஜோசப் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

இதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பனை தென்னை வளம் சார்ந்த தொழிற்துறையில் பரம்பரையாக சம்பந்தப்பட்ட சமூக அங்கத்தவர்கள் ஈடுபட்டு வருவதை மாற்றியமைத்து அதனை ஓர் தொழிற்துறையாகவும் சுயதொழில் துறையாகவும் கருதி சகல தரப்பினரும் அதில் பங்காற்ற முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சுயதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையிலும் அதன் கீழ் பனை அபிவிருத்தி சபை நிர்வாகம் வரும் நிலையிலும் தம்மிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும் கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் தேசிய அருங்கைப்பணி நிலையம் ஆகியவற்றின் ஊடாக பனை தென்னை வளங்கள்சார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோருக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு தரம்மிக்க உள்ளூர் உற்பத்திகளை உருவாக்க தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் நூறு புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட சங்க பணியாளர்கள் மற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பதக்கங்கள் அணிவித்து கௌரவித்த அதேவேளை மன்னார் அரசாங்க அதிபர் நீக்களஸ்பிள்ளை மன்னார் சிவசுப்பிரமணிய தேவஸ்தான குருக்கள் பிரம்மசிறி தர்மகுமார சர்மா மன்னார் பங்குத் தந்தை வசந்தகுமார் அடிகளார் மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல் வடமாகாண மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளர் கிறிஸ்டி ஜோசப் மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் மங்கலதாஸ் ஆகியோர் பரிசில்களையும் வழங்கிவைத்தனர்.

இன்றைய நிகழ்வுகளில் சிறார்களின் நடனம் கவிதை வாசித்தல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்ற அதேவேளை முற்றுமுழுதாக பனை ஓலை உற்பத்திகளினால் தயாரிக்கப்பட்ட ஆடை அணிகலன்களை அணிந்த நிலையில் அபிநயா என்ற சிறுமி நான் பனையோலை என சுயசரிதத்தை வெளிப்படுத்தியமை அனைவரையும் வெகுவாக கவர்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய மன்னார் மேற்கு பனை தென்னை வள அபிவிருத்திச் சங்கத்தின் தலைமையக பணிமனைக் கட்டடடத்தின் திறப்பு விழாவில் பேசாலை பங்குத் தந்தை அகஸ்டின் புஷ்பராஜ் அடிகளார் உள்ளிட்ட கத்தோலிக்க இந்து சமயக் குருமார் மன்னார் மாவட்ட கடற்படைக் கட்டளைத்தளபதி கொமாண்டர் பீரிஸ் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜமால்தீன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் தோழர் புரட்சிமணி மாவட்ட அமைப்பாளர் தோழர் லிங்கேஸ் உதவி அமைப்பாளர் தோழர் சந்துரு சங்க பணியார்கள் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’