வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 நவம்பர், 2010

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்ப அனைவரும் முன்வரவேண்டும். - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்ப அனைவரும் முன்வரவேண்டுமென ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (17) பச்சிலைப்பள்ளிப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்துக்குத் தலைமைதாங்கி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளர்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த முப்பதாண்டு காலத்திலும்; பச்சிலைப்பள்ளிப் பிரதேசம் யுத்தத்திற்குள் முழுமையாகவே சிக்கியிருக்கிறது. இங்கே எல்லாக் கட்டுமானங்களும் அழிவடைந்து விட்டன. அதனால் மக்கள் மீளக்குடியேறுவதில் தாமதங்கள் ஏற்பட்டன. இப்பிரதேசத்தின் முக்கியமான வளமும் தொழில் வாய்ப்பைத்தருவதும் தென்னைகளாகும். ஆனால் அங்கு 80 சத வீதத்திற்கும் அதிகமான தென்னைகள் அழிந்து விட்டன என்று தெரிவித்தார்.
இப்பிரதேசத்தில் கிளாலி இத்தாவில் முகமாலை போன்ற இடங்களில் மீள் குடியேற்றம் சாத்தியமாவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்றும் ஆனால், நாம் உச்சமான வளங்களைப் பயன்படுத்தி இதைவிடக்குறைந்த காலப்பகுதிக்குள் அந்தப் பகுதியின் மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்க முயற்சிக்கிறோம். மக்கள் மீண்டும் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதில் ஆர்வமாக இருக்கின்றனர். இதை யாரும் குழப்பும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது என்றும் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பிரதேசத்தின் வாழ்வாதாரத் திட்டங்கள் காணி வீடமைப்பு நீர் வழங்கல் கல்வி மருத்துவம் விளையாட்டு தொழில்முயற்சிகள் விவசாயத்திட்டங்கள் மீள்குடியமர்வுப் பிரச்சினைகள் போக்குவரத்து, சந்தை போன்ற பல முக்கிய விடயங்களைப் பற்றி ஆராயப்பட்டது.
இவை தொடர்பாக மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் அந்தப் பிரச்சினைகளுடன் தொடர்பான தரப்பினரிடமிருந்து விளக்கங்களைக் கோரினார். அத்துடன், அவர்களிடமிருந்து அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கால எல்லையையும் தீர்;த்துக் கொள்வதற்கான உத்தரவாதத்தையும் பெற்றுக்கொண்டார்.
இதன்படி, உட்கட்டுமான அபிவிருத்தி நடவடிக்கைகளைத் துரித கதியில் மேற்கொள்வதென்றும் இயக்கச்சி சந்திப்பகுதியில் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் சந்தையை இயங்கவைத்தல் கடைத்தொகுதிகளை படையினரிடமிருந்து மக்களிடம் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை மீள்குடியேற்றத்தை முழுமையாகச் சாத்தியப்படுத்த படைத்தரப்பு தம்மாலான முழுமையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தின் இராணுவப் பொறுப்பதிகாரி உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிநிவாசன் உதவி அரசாங்க அதிபர் ஜெயராணி பிரதேச செயலர் முகுந்தன் திணைக்களங்களின் தலைவர்கள் தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள் தனியார் போக்குவரத்துக்கழகத்தினர் பொலிஸ் அதிகாரி படை அதிகாரிகள் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’