வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 நவம்பர், 2010

புலிகளின் நிர்ப்பந்தத்தினாலேயே இழப்புகளை மிகைப்படுத்தி கூறினோம்: டொக்டர் சண்முகராசா சாட்சியம்

றுதி யுத்தத்தின்போது பொதுமக்களின் உயிரிழப்புகள், காயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு மிகைப்படுத்தி தெரிவிக்குமாறு தாம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிர்ப்பந்திக்கப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வி.சண்முகராசா நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு சாட்சியமளித்துள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் கொழும்பில் இன்று சாட்சியமளிக்கும்போதே வைத்தியர் சண்முகராசா மேற்படி கருத்தினை தெரிவித்தார்.
இறுதிகட்ட யுத்தத்தில் பலத்த சவால்களுக்கு மத்தியில் தாம் சேவையாற்றியதாகவும் இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே பொதுமக்களின் இழப்புகளை சர்வதேச ஊடகங்களுக்கு தாம் மிகைப்படுத்தி வெளியிட நேர்ந்ததாகவும் வைத்தியர் மேலும் சாட்சியமளித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’