ஆணைக்கோட்டை லெவின் ஸ்ரார் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் பயன்படுத்தி வருகின்ற மைதானம் தொடர்பில் அம்மைதானம் அமையப் பெற்றுள்ள காணி உரிமையாளருக்கும் விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தொடர்ந்து ஆணைக்கோட்டை லெவின் ஸ்ரார் விளையாட்டுக் கழக அங்கத்தவர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடியதுடன் மைதானம் அமையப்பெற்றுள்ள காணி சொந்தக் காரருடனும் கலந்துரையாடினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று அப்பகுதிக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் காணிச் சொந்தக் காரருக்கு வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் அதே அளவுடைய பிறிதொரு காணியைப் பெற்றுத் தருவதாகவும் அதுவரையில் கழக உறுப்பினர்களும் காணி உரிமையாளரும் அமைதி காக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே மைதானம் தொடர்பாக இம்மாதம் 16ம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படுமெனவும் அதற்கு இரு தரப்பினரும் தமக்கு ஒத்துழைப்பும் ஒத்தாசையும் நல்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்ட அமைச்சர் அவர்கள் இருதரப்புக்கும் குந்தகம் ஏற்படாத வகையில் தாம் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’