வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 நவம்பர், 2010

மகிந்த-கோத்தபயா-பசில் மீது புலிகள் தாக்குதல் நடத்தலாம்-சொல்கிறது சிங்கள இதழ் திவயின

கிந்த ராஜபக்சே, அவர் தம்பிகள் கோத்தபாய மற்றும் பசில் ராஜபக்சே உள்ளிட்டோர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டு பரபரப்பேற்படுத்தியுள்ளது
.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையிலிருந்தே துடைத்தழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு கூறியது. அதை இதே பத்திரிகைதான் தொடர்ந்து ஆமோதித்து வந்தது.
ஆனால் இப்போது திடீரென்று மீண்டும் 'புலிப் பய' பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் பத்திரிகையின் தலையங்கத்தில், "புலிகள் அமைப்பு முழுதாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்பட முடியாதெனவும், அதிபர் மற்றும் அவரது தம்பிகள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் வெளிநாடுகளில் இயங்கி வரும் புலம்பெயர் விடுதலைப் புலிகள் தமிழ் ஆதரவு அமைப்புக்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதும் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளை புலிகள் வலையமைப்பு ஆரம்பிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
பொது நிகழ்வுகள், அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் முக்கிய பிரபுக்கள் தங்களது பாதுகாப்பு தொடர்பில் மேலதிக கவனம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது வேண்டுமென்றே முன்னெடுக்கப்பட்டுள்ள பிரச்சாரம் என்றும், அரசியல் ரீதியாக புலிகள் மேற்கொள்ளும் போராட்டங்களை சர்வதேச சக்திகளின் துணையுடன் நசுக்கவே இந்த பிரச்சாரத்தை அரசும் அதன் பக்கச் சார்பு பத்திரிகையான திவயினவும் மேற்கொண்டிருப்பதாக தமிழ் தலைவர்கள் கருதுகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’