வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 29 நவம்பர், 2010

இலங்கை - பாக். இடையில் உறவுமுறை முன்னேற்றம் காணும் : அமைச்சர் பீரிஸ்

ரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக பாகிஸ்தான் ஜனாதிபதி அஸிப் அலி சர்தாரியுடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் முன்பு இருந்ததைவிட ஆழமான நட்புறவைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு முறை பல துறைகளிலும், முன்னேற்றம் காணும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி அஸிப் அலி சதர்தாரியை நேற்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையினை அடுத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பீரிஸ் இவ்வாறு கூறினார். ஹில்டன் ஹோட்டலில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம் பெற்றது. சந்திப்பை அடுத்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ் கூறியதாவது:
பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியின் இலங்கை விஜயமானது இரு நாட்டு வரலாற்றிலும் முக்கிய திருப்பமாக அமையும், ஏனெனில் கடந்த முப்பது ஆண்டுகால பயங்கரவாத யுத்தத்திலிருந்து ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ நாட்டை மீட்டுள்ளார். தற்போது நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருந்து வந்த முக்கிய காரணியான யுத்த சூழல் முடிவடைந்துள்ளது. எனவே நாடு முன்னேற்றமடையத்தக்க தருணம் இதுவாகும்.
இதேபோன்று பாகிஸ்தானிலும் கடந்த காலங்களில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறைவடைந்துள்ளன. எனவே இரு நாடுகளும் தடைகளைக் கடந்து அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான உரிய காலகட்டமாக தற்போதைய சூழல் அமைந்துள்ளது. இதற்கமைவாக இரு நாடுகளுக்கிடையிலான செயற்பாடுகளை புரிந்துணர்வுடன் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். குறிப்பாக இலங்கையின் தேயிலை, வெற்றிலை உள்ளிட்ட பல உற்பத்திப் பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யவும்,அங்கிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யவும் வியாபார ரீதியிலான புதிய செயற்றிட்டங்களை உருவாக்கவும், பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டது.
இதேபோன்று ஆசிய வலயத்தில் ஏனைய நாடுகளுடனான நட்புறவை கட்டியெழுப்பி தகவல் பரிமாற்றங்களை செய்து கொள்வது தொடர்பாகவும், பாகிஸ்தான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அத்துடன் பாதுகாப்பு மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான பேச்சுக்களை இரு நாட்டின் ஜனாதிபதிகளும் நடத்தவுள்ளனர். இன்று அந்தப் பேச்சுவார்த்தை இடம் பெறும். எனவே எதிர்காலத்தில் இலங்கை பாகிஸ்தான் உறவு முறை பல துறைகளிலும், முன்னேற்றம் காணும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’