எஜமானார்கள் வீட்டில் இல்லாத சமயம் 5 பிஸ்கெட்டுகளை சாப்பிட்டதற்கான தண்டனையாக 14 வயது சிறுமியின் உள்ளங்கையில் சூடமேற்றி கொடுமை செய்த சம்பவமொன்று மொரகாஹேன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரான எஜமானாரும் மேலும் ஒரவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரும் அவரது மனைவியும் விருந்துபசாரமொன்றுக்காக வெளியில் சென்றிருந்த போதே மேற்படி சிறுமி அதிகமான பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவரது கைகளில் அவர்கள் சூடமேற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சும்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகாஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’