வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 நவம்பர், 2010

பீகாரில் ஆளும் கூட்டணி பெரும் வெற்றி

க்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக் கூட்டனி சட்டசபையின் 243 இடங்களில் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அந்தக் கூட்டணிக்கு நான்கில் மூன்று பங்கு இடங்கள் கிடைத்துள்ளன என்று மாநிலத் தலைநகர் பட்னாவில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்
ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார் தலைமையில் புதிய அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையிலான மக்கள்ஜனசக்தி கட்சி கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும் லாலுவின் மனைவியுமான ராப்ரி தேவி அவர் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளார்.
இந்தியாவின் மத்திய அரசுக்கு தலைமையேற்றுள்ள காங்கிரஸ் கட்சி பீகார் சட்டசபைத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளது.
கடந்த தேர்தலைவிட காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடங்களே கிடைத்துள்ளன. அக்கட்சி இரட்டை இலக்கங்களைக் கூட எட்டவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
மாநிலத்தின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி ஆளும் கூட்டணி தேர்தலை அணுகியது, அதற்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்துள்ளது என்று செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பீகாரின் நகரப் பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி குறிப்பிடத்தகுந்த அளவுக்கு முன்னிலை வகிக்கிறது. கடந்த சட்டமன்றத்தில் இருந்ததை விட இம்முறை அக்கட்சிக்கு கூடுதல் இடம் கிடைக்கிறது.
தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, பீகாரில் தனது கட்சியின் செயற்பாடுகளை மீளாய்வு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. வளர்ச்சியின் அடிப்படையில் வெற்றி என்றால் அதை தாங்கள் வரவேற்பதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆளும் கூட்டணி முன்னெடுத்த வளர்ச்சிப் பணிகளுக்கு கிடைத்த பரிசே இந்த மிகப் பெரிய வெற்றி என்றும், அந்தப் பணிகள் தொடரும் எனவும் பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’