மக்கள் தங்கி வாழும் நிலையில் இருந்து சுயசார்பு நிலைக்கு இட்டுச் செல்வதே எமது குறிக்கோளாக இருக்க வேண்டுமென ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (2) தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் மக்கள் தங்கி வாழும் நிலையை அகற்றி தமது பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுக்கான வழிவகைகளை கண்டறிவதற்கு நாம் வழிகாட்ட வேண்டும்.
மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்குபற்றக் கூடியதாக பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட வேண்டுமெனவும் எமது செயற்பாடுகள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அமைப்புக்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் வாழ்வதாரத்தை கட்டியெழுப்ப உழைக்க வேண்டும். பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்கள் ஒரு புறமும் அதற்கு தீர்வு காண்பவர்கள் மறுபுறமாகவும் செயல்பட முடியாது. இந்த பிரதேசத்தில் செயல்படுகின்ற அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதன் மூலம் மட்டும் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது அவர்கள் சார்ந்த மக்கள் அமைப்புக்களைக் கட்டியெழுப்புவதன் மூலமே அவர்களை வலுப்படுத்த முடியும் என்றும் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
இக் கூட்டத்தில் உதவி பிரதேச செயலர் ரஞ்சனா செயலக அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’