வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 3 நவம்பர், 2010

ஏஎச்1என்1 நாடுமுழுவதிலும் பரவும் அபாயம் _

எச்1என்1(AH1N1) தொற்று நோய் மீண்டும் நாடு முழுவதிலும் பரவிவருகின்றது என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடுமுழுவதிலும் தொற்று நோய் பரவிவருவதனால் அனைத்து அரச வைத்தியசாலைகளில் உள்ள சுகாதாரப் பிரிவுகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுகாதார சேவை வைத்திய தலைவர் அஜித் மென்டிஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'சாதாரண தடிமன், காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவற்றிற்காக வைத்தியசாலைகளுக்கு வருபவர்களுக்கு தொற்று நோய் உள்ளதா என வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
நோய் பரவுவதற்கான அறிகுறிகள் காய்ச்சல், தடிமன், இருமல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந் நோயினால் கொழும்பு மாவட்டத்தில் 18 பேரும், கம்பஹா மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் தலா 4 பேரும் கேகாலை மாவட்டத்தில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை தொற்று நோய் தடுப்புப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’