வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 21 நவம்பர், 2010

செக்ஸ் கல்விக் கையேடு தொடர்பான நீதிமன்ற விசாரணை நாளை

கொழும்பு சர்வதேச பாடசாலையில் 11 வயது மாணவ மாணவிகளுக்கு விநியோகிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பாலியல் கல்விக் கையேடு தொடர்பான வழக்கு நாளை திங்கட்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் துலாஞ்சலி அமரசிங்க முன்னிலையில் விசாரிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய கல்வியமைச்சு தயாரித்த அறிக்கையொன்றை பொலிஸார் நேற்றுமுன்தினம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்பாலியல் கல்வி நூல் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பெற்றோர்களில் ஒருவரான டி.தொடங்கொட செய்த முறைப்பாட்டையடுத்து 5 வாரங்களுக்கு முன் இவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பின் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட நான்காவது அறிக்கை இதுவாகும். ஏற்கெனவே தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னர் தலைவர் டாக்டர் ஜகத் வெள்ளவத்த, ஆசிரிய கல்வி ஆணையாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண, கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பிரியாஞ்சலி டி சொய்ஸா ஆகியோரும் ஏற்கெனவே அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தனர்.
முன்னாள் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலளாருமான டி. தொடங்கொட, மேற்படி கையேடு விநியோகத்தை பாடசாலை அதிகாரிகள் நிறுத்தச் செய்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து இது தொடர்பாக சட்ட நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’