வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 21 நவம்பர், 2010

முப்படையினரின் பாரிய கூட்டுப்பயிற்சி இன்று ஆரம்பம்

லங்கை வரலாற்றில் முதல் தடவையாக முப்படையினரும் இணைந்து 9 நாட்கள் நீடிக்கும் பாரிய கூட்டுப் பயிற்சியொன்றை இன்று ஆரம்பிக்கவுள்ளனர்.

மன்னார் சிலாவத்துறையிலிருந்து அநுராதபுரம் மாவட்டத்தின் தந்திரிமலை பிரதேசத்திலுள்ள மாவில்லு வரை இப்பயிற்சி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இப்பயிற்சி நடவடிக்கையில் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த 2500 பேர் பங்குபற்றவுள்ளனர். இன்று பிற்பகல் 3 மணிக்கு இப்பயிற்சி ஆரம்பமாகவுள்ளது.
இதில் இராணுவ கமாண்டோக்கள் மற்றும் விசேட படைத் துருப்பினர் 1600 இற்கும் அதிகமானோர் பங்குபற்றவுள்ளதாக இராணுவத்தின் ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படைக் கப்பல்கள், விமானப்படை விமானங்கள் ஆகியனவும் இப்பயிற்சி நடவடிக்கையில் பயன்படுத்தப்படவுள்ளன.
சகல மட்டங்களிலும் முப்படைகளினதும் கட்டளைத் திறமைகளை சோதிப்பதற்காக இப்பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
படைகளின் தீர்மானம் மேற்கொள்ளல், ஏனைய சகோதர படைகளுடனான கூட்டு நடவடிக்கைகளில் தமக்கு விதிக்கப்பட்ட இலக்கை அடைதல், பரஸ்பர புரிந்துணர்வு, தமது சொந்த ஆற்றல்கள், வரையறைகள் என்பனவற்றை இனங்காணல் முதலானவற்றை சோதிப்பதாக இப்பயிற்சிகள் அமையவுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’