வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 16 நவம்பர், 2010

கிரிஸ் கேல் 'முச்சதம்'

லங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரரான கிரிஸ் கேல் 333 ரன்களை அடித்து சாதனைப் பட்டியலில் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக காலியில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தை மேற்கு இந்தியத் தீவுகள் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் என்ற வலுவான நிலையில் ஆரம்பித்தது.
முதல் நாள் ஆட்டத்தில் 219 ரன்களை அடித்திருந்த கிரிஸ் கேல் தொடர்ந்து ஆடி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 300 ஓட்டங்களைத் தாண்டினார். இதன் மூலம் வெளிநாடு ஒன்றில் நடந்த போட்டியில் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் மேற்கிந்திய அணி வீரர் என்ற சாதனையை கிரிஸ் கேல் புரிந்துள்ளார்.
காலி கிரிக்கெட் மைதானத்தில் அடிக்கப்பட்ட முதல் முச்சதம் இதுவேயாகும்.
மேலும் பிராட்மேன், பிரயன் லாரா, வீரேந்திர ஷேவாக் ஆகியோரைத் தொடர்ந்து இரண்டு முறை முச்சதங்கள் அடித்தவர் பட்டியலில் கிரிஸ் கேலும் இடம்பிடித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’