-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
திங்கள், 22 நவம்பர், 2010
2011ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம்
2011ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம்
படைவீரர் குடும்பங்களின் 3 ஆவது குழந்தைக்கு 100,000 ரூபா நாடாளுமன்றத்தில் சற்றுமுன் 2011 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஒவ்வொரு படைவீரர்களின் குடும்பத்திலும் பிறக்கும் மூன்றாவது குழந்தைக்கு தலா ஒரு லட்சம் ரூபா வழங்கப்படும் என அறிவித்தார்.
பாதுகாப்பு படையினரின் பொருளாதார நலன்புரி விடயங்களுக்காக 300 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உள்ளுர் தொலைபேசி கட்டணம் குறைப்பு உள்ளுர் தொலைபேசி அழைப்புக்களுக்கான கட்டணம் இரண்டு ரூபாயிலிருந்து 1.50 சதமாக குறைக்கப்படவுள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புக்களுக்கான கட்டணம் இரண்டு ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மிஹின்லங்கா நிறுவனங்களுக்கு வரி விலக்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் மிஹின்லங்கா ஆகிய நிறுவனங்களுக்கு அவை தம் இலாபத்தை அதிகரிப்பதற்கு உதவும் முகமாக, அடுத்த 10 வருடங்களுக்கு வரி விலக்கு அளிப்பதாக ஜனாதிபதி வரவு, செலவுத் திட்ட உரையின்போது தெரிவித்தார் முதலீட்டுச்சபை செயற்றிட்டங்கள் மீள விண்ணப்பிக்க அறிவித்தல் கடந்த 5 வருடங்களாக செயற்படத் தொடங்காத சகல முதலீட்டுச்சபை (BOI) செயற்றிட்டங்களும் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டுமென வரவு, செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவித்தார். சிகரெட், மதுபானம், சூதாட்ட நிலையங்களுக்கான வரி அதிகரிப்பு சிகரெட், மதுபான வகைகள் மற்றும் சூதாட்ட நிலையங்களுக்கான வரி, 35 வீதத்திலிருந்து 40 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக 2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தனியார் துறையினருக்கு ஓய்வூதியம் ஊழியர்கள் மற்றும் தொழில் தருனர்களிடமிருந்து 2 வீத பங்களிப்புடன் கூடிய தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்று கொண்டுவரப்படுமென நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’