வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 நவம்பர், 2010

ஏழு சிறுமிகளிடம் பாலியல் வல்லுறவு : தொண்டர் ஆசிரியர் ஹட்டனில் கைது

ரம் ஐந்தில் கல்விக்கற்கின்ற மாணவிகள் ஏழு பேரிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நோட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டிக்கோயாவுக்கும் நோட்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசத்திலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் தொண்டர் ஆசிரியராக சேவைபுரிந்த 25 வயதுடைய இளம் தொண்டர் ஆசிரியரொருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோட்டன் பொலிஸ் பிரிவைச்சேர்ந்த பாடசாலை ஒன்றின் தொண்டர் ஆசிரியர் குறித்து பெற்றோர் ஒருவர் நோட்டன் பொலிஸில் பதியப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே இந்தத் தொண்டர் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நோட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த தொண்டர் ஆசிரியரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற ஒன்பது தொடக்கம் பத்து வயது வரை வயதுடைய ஏழு சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மருத்துவ பரிசோதனைக்குப்பிறகே குறிப்பிட்ட தொண்டர் ஆசிரியருக்கெதிராக ஹட்டன் நீதிமன்றத்தின் மூலமாக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென நோட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’