வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 7 நவம்பர், 2010

பாதணிகள் மற்றும் தோற்பொருள் தேசிய கண்காட்சி 2010 அமைச்சர்கள் டக்ளஸ் தேவாந்தா ரிஷாட் பதியுதீன் ஆகியோரால் அங்குரார்ப்பணம்.

மைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரால் பாதணிகள் மற்றும் தோற்பொருள் தேசிய கண்காட்சி 2010 நேற்றையதினம் (05) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் மேற்படி கண்காட்சியினை அமைச்சர்கள் இருவரும் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். கடந்த 2009ம் ஆண்டு 140 ஆக காணப்பட்ட உற்பத்தியாளர்களின் காட்சியறைகள் இவ்வருடம் 160 ஆக அதிகரித்துள்ளமை குறித்து ஏற்பாட்டார்கள் தமது மகிழ்ச்சியை அங்கு வெளிப்படுத்தினார்கள்.

தோற்பொருட்களையும் மற்றும் உள்ளூர் மூலவளங்களையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தரமான உற்பத்திகள் மூலம் உள்நாட்டு பாவனையாளர்களின் தேவைகள் பூர்த்திசெய்யப்படுவது மட்டுமன்றி ஏற்றுமதி ஊடாக வெளிநாட்டு நிதி வருவாயும் நாட்டிற்கு பெற்றுக்கொள்ளப்படுவது பிரதான விடயமாகும். பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் வரும் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் வரும் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள மேற்படி கண்காட்சியானது இன்று முதல் எதிர்வரும் 7ம் திகதி வரை தொடர்சியாக இடம்பெறவுள்ளன.

இன்றைய நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதி அமைச்சர் ஜெயரட்ண ஹேரத் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ரஞ்சித் ஹெட்டியாராட்சி பொது முகாமையாளர் ஜஸ்மின் மன்னப்பெரும ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ஜனக ரட்நாயக்க கண்காட்சி ஏற்பாட்டுக் குழுத்தலைவர் ரஞ்சித் ஹெட்டியாராட்சி ஆகியோர் உட்பட அமைச்சசு அதிகாரிகள் ஏற்றுமதியாளர்கள் அன்னிய இறக்குமதியாளர்கள் ஆகியோருடன் பெருமளவிலானோர் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’