வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 19 அக்டோபர், 2010

உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்

ற்று முன்னர் நிறைவடைந்த கிழக்கு மாகாண சபையின் விசேட கூட்டத்தில் 11 மேலதிக வாக்குகளால் உத்தேச உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக 18 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மையினக் கட்சிகளான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனையைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினரான கே.எம்.ஜவாத் ஈ.பி.ஆர்.எல்.எப் (வரதர் அணி) மாகாண சபை உறுப்பினரான மற்றும் இரா.துரைரட்ணம் உட்பட ஐக்கிய தேசிய கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் இச்சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவருமான தாயா கமகே மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆறு மாகாண சபை உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினரான விமல் பியதிஸ்ஸ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பை ஆகியோர் வாக்கெடுப்பை பகிஷ்கரித்தனர்.
கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினரான ஹசன் மெளலவி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரான கலபதி சந்திரதாஸ ஆகியோர் இன்றைய விசேட கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’