நேற்றைய தினம் (17) தங்கல்லை சீனிமோதர கிராமத்தில் மீளப் புனரமைக்கப்பட்ட தும்புத் தொழிற்சாலையையும் உடஅளுபொத்தெனிய கிராமத்தில் கித்துள் சார்ந்த உற்பத்திப் பொருட்கள்; தொழிற்சாலையையும் திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வாறான உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதன் ஊடாக உற்பத்தி கிராமங்களை நாடாளாவிய ரீதியில் அமைத்து வருவதை இங்கு சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வகை உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி வைபவங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ உதித்த லொக்கு பண்டார அமைச்சின் செயலாளர் திரு.சிவஞானசோதி கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் உதயஸ்ரீ காரியவசம் பொது முகாமையாளர் திருமதி ஜெஸ்மின் மான்னப்பெரும உட்பட அமைச்சு அதிகாரிகளும் அரச அதிகாரிகளும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
|
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’