வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 15 அக்டோபர், 2010

நாம் எமது சொந்த காலில் நின்று உழைக்க வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.

வி வசாயிகள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தங்களுடைய வாழ்க்கையையும் தொழிலினையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கண்டாவளைப் பிரதேச செயலகத்தில் நேற்று (13) இடம்பெற்ற பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம விவசாயிகளுக்கான விவசாய உள்ளீடுகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளர்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து இங்கு பணியாற்ற முடியாத சூழல் ஏற்படலாம் எனவேதான் நாங்களும் அவர்களும் உங்களுக்குத் தேவையான உதவிகளை இயலுமானவரை செய்து தருகின்றோம். நீங்கள் எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையும் நிறுவனங்களையும் எதிர்பார்க்கக் கூடாது. கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நீங்கள் உங்களது சொந்தக் காலில் நிற்கவேண்டும்.
இவ்வாறு கிடைக்கின்ற உதவிகளை வழங்குவதற்கான பயனாளிகளை தெரிவுசெய்யும் போது அனைத்து மட்டத்தினரும் நியாயமான முறையில் நடந்துகொள்ளவேண்டும். அத்தோடு மக்கள் பிரதிநிதிகள் நாம் என்ற வகையில் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது எமது கடமையாகும். இம்மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 25000ற்கு மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. இவர்கள் அனைவருக்குமான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உதவிகளை எவராலும் செய்யமுடியாது. எனவே கிடைக்கப்பெறுகின்ற உதவிகளைப் பாதிப்பின் விகிதாசாரத்திற்கேற்ப வழங்குதல் வேண்டும். ஏனையவர்கள் வங்கிகளில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் குறைந்த வட்டிகளில் வழங்கப்படுகின்ற கடன்களைப் பெற்று தங்களின் சுயமுயற்சிகளில் ஈடுபடவேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கு பொறுப்பும் ஏற்படும், எல்லாம் மானியமாகக் கிடைக்கும் என எதிர்பார்;க்கக் கூடாது.
வழங்கப்பட்ட பொருட்களிலிருந்து நீங்கள் உயர்ந்த பயனைப் பெறவேண்டும். விவசாயிகளான நீங்கள் மிகவும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதோடு இவ்வாறான வாழ்வாதார உதவிகளை மேற்கொள்ள முன்வந்த ஒக்ஸ்பாம் நிறுவனத்தினருக்கும். அதனை நடைமுறைப்படுத்துகின்ற சர்வோதைய நிறுவனத்தினருக்கும் உங்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
ஒக்ஸ்பாம் நிறுவன நிதி பங்களிப்பில் சர்வோதயம் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இவ்வாழ்வாதாரத் திட்டத்தின் முதற்கட்டமாக நீர் இறைக்கும் இயந்திரம் அதற்குரிய உபகரணம் தெளிகருவி ஒரு சுருள்முட்கம்பி காணிகளை துப்பரவு செய்வதற்கான 4000 ரூபா பெறுமதியான காசோலை என்பன தெரிவு செய்யப்பட்ட 90 விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கண்டாவளைப் பிரதேச செயலர் சத்தியசீலன் ஒக்ஸ்பாம் சர்வோதய நிறுவனப் பிரதிநிதிகள் ஈ.பி.டி.பி யின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் மற்றும் விவசாயிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’