வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 15 அக்டோபர், 2010

ஐ.தே.கவின் புதிய யாப்பு தயார்

றுசீரமைப்புக்கான முன்மொழிவுகளின் அடிப்படையில் ஐ.தே.க.வின் புதிய யாப்பு தயாரித்து முடிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டில் இந்த யாப்பு அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
புதிய யாப்பைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பன இது குறித்த அறிக்கையை கட்சியின் செயற்குழுவிடம் இன்று கையளித்துள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எனினும் வருடாந்த மாநாட்டிற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் கூறினார்.
'நாடாளுமன்றில் வரவுசெலவுத்திட்ட விவாதம் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ளது. எனவே அவ்விவாத நடவடிக்கைகளுக்குடன் சிக்கல் ஏற்படாத விதத்தில் கட்சி மாநாட்டிற்கான திகதி தீர்மானிக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற அமர்வுகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இவ்விடயத்தில் கட்சி மாநாட்டிற்கான திகதி தீர்மானிக்கப்படும்' என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’