மட்டக்களப்பு நகரில் பழுதடைந்த, அழுகிய முட்டைகளை விற்பனை செய்த பிரபல வர்த்தக நிலையத்தின் மீது வழக்கு தொடரவுள்ளதாக பொது சுகாதார பகுதினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை மட்டக்களப்பிலுள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் (கார்கில் புட்ஸ் சிற்றி) கொள்வனவு செய்யப்பட்ட முட்டைகளுக்குள்ளிருந்து புழுக்கள் வெளிவந்ததையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொதுச்சுகாதார பரிசோதகர் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 230 முட்டைகளை சீல் வைத்து விற்பனைக்கு தடை செய்ததுடன் குறித்த வர்த்தக நிலையத்தின் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’