வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

ஊடகங்கள் நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

டைமுறைச் சாத்தியமான வழிமுறைகளைப் பின்பற்றி ஊடகங்கள் தமது பணிகளை செவ்வனே செய்ய வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற சிகரம் ஊடக இல்லத்தின் புதிய ஊடக பயணத்தின் ஆரம்பம் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஊடகங்கள் நடைமுறைக்குச் சாத்தியமான வழிமுறைகளைப் பின்பற்றி எதுசரி எது பிழை என்பதை யதார்த்தமான முறையிலும் மக்களைச் சென்றடையக் கூடிய வகையிலும் வெளிக்கொணர வேண்டும்.
கடந்த காலங்களில் பொதுவாக ஊடகங்கள் அவற்றின் இயக்குபவர்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே இயங்கி வந்தன.
அதனால் தான் எமது மக்கள் சொல்லொணாத் துன்ப துயரங்களையும் இழப்புக்களையும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
எனவே நடுநிலைமைக் கோட்பாடுகளைக் களைந்து மக்களை நல்வழிப்படுத்தும் நோக்குடனும் உள்ளதை உள்ளபடி சொல்கின்ற வகையிலும் ஊடகங்கள் வெளிவர வேண்டியது கட்டாயமாகும் என்றும் சிகரம் ஊடக இல்லப் பணிப்பாளர் ருஷாங்கனின் முயற்சி பாராட்டுக்குரியது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்ககள் தெரிவித்தார்.
நிகழ்வில் ருஷாங்கன் தனது தலைமையுரையில் தற்போதைய சூழலில் ஊடகத்துறை ஆற்ற வேண்டிய பங்கு பணிகள் மிக முக்கியமானவை என்பதுடன் மக்களுக்குச் சேவை செய்வதை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டியது முக்கியமானது.
மக்களுக்கு ஒருபோதும் கருத்துக்களை திணிக்காமலும் வழமையாக இருக்கின்ற ஊடக பாரம்பரியத்தை பேணாமலும் ஊடகங்கள் பயணிக்கும் அதேவேளை புதியதொரு பாரம்பரியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சண்முகலிங்கன் தனதுரையில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது ஊடகக் கல்வி பாடவிதானங்களில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது பல்கலைக்கழக கலைப்பீடத்திலும் ஊடகத்துறையும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன்இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஊடகக் கல்வி மிக மிக முக்கியமானது என்றும் நலிவடைந்துள்ள எமது மக்களுக்கு நம்பிக்கை தருகின்ற வகையிலான ஊடகங்களே தற்போது தேவையாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மனித உரிமை இல்லத்தின் தலைவி மற்றும் ஊடகவியலாளர் கோவை நந்தன் யாழ் வர்த்தக சங்கத் தலைவர் ஆகியோரும் உரைநிகழ்த்தினர்.
தொடர்ந்து சிகரம் ஊடக இல்ல மாணவர்களின் ஆக்கங்களைத் தாங்கி வெளிவந்த சிகரம் தொடு சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.
சிறப்புப் பிரதியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்றுக் கொள்ள ஏனைய பிரதிகளை அதிதிகள் பெற்றுக் கொண்டனர். இதேபோன்று சிறப்புப் பிரதிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளிட்ட அதிதிகளும் வழங்கி வைத்தனர்.

சிகரம் ஊடகக் கல்லூரியில் 5 மாத கால பயிற்சி நெறியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஏனைய அதிதிகளும் வழங்கி வைத்தனர்.

அடுத்து சிகரம் ஊடக இல்லத்தின் இணையத் தளத்தை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சண்முகலிங்கன் தொடக்கி வைத்தார்.






























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’