வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

நாவற்குழி மஹிந்தபுரம் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு.

தென்மராட்சி மேற்கு நாவற்குழி மஹிந்தபுரம் வீடமைப்புத்திட்டத்தில் வசிக்கும் மக்கள் பிரதிநிதிகள் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்று (22) மாலை அமைச்சரின் யாழ். பணிமனையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் அவர்கள் தமது கோரிக்கைகள் மற்றும் தேவைகளை எடுத்துக் கூறினார்கள். குறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முழு முயற்சி காரணமாக மேற்படி வீடமைப்புத் திட்டத்தில் குடியேற்றப்பட்டுள்ள நிலையில் வெளியிடங்களுக்குச் சென்று வசிப்பது குறிப்பிட்ட வீடுகளில் வெளியார் வசிப்பது உறவினர்களின் பெயரில் வீடுகள் இருப்பது போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன. இதன்போது கருத்துரைத்த அமைச்சரவர்கள் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு சொந்த வீடுகள் எனும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் உயரிய நோக்கத்திற்கு அமையவே இவ்வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தில் வீடுகள் பெற்றுக்கொண்டோர் தொடர்ச்சியாக அவ்வீடுகளிNலுயே வசிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பின் இறுதியில் பயன்தரு மரக்கன்றுகள் வளர்க்கும் பாரிய திட்டம் மற்றும் கட்டாந்தரையினை பசுஞ்சோலையாக்கும் திட்டம் குறித்து எடுத்துரைத்த அமைச்சரவர்கள் மஹிந்தபுரம் மக்களும் இதில் இணைந்துகொள்ள வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். இதற்கு மஹிந்தபுரம் வீடமைப்புத்திட்ட மக்கள் பிரதிநிதிகள் உற்சாகமாக வரவேற்புத் தெரிவித்தனர். அமைச்சருடனான மஹிந்தபுரம் வீடமைப்புத்திட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான இச்சந்திப்பில் ஈ.பி.டி.பி. யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்டின் உதயன் தென்மராட்சி பிரதேச உதவிச் செயலாளர் செல்வி ரஞ்சனா தென்மராட்சி காணி உத்தியோகத்தர் வீ.சந்திரதேவா கிராம உத்தியோகத்தர் நடராஜா மஹிந்தபுரம் வீடமைப்புத்திட்ட மக்கள் பிரதிநிதிகள் குழுத் தலைவர் டயஸ் செயலாளர் ஜெபநேசன் பொருளாளர் ஜஸ்டின் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’