வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்!

லங்கைத் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அசினுக்கு நோட்டீஸ்!
அசின் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண்சிகிச்சை முகாமில் பங்கேற்றதால் பார்வை பறிபோன இலங்கைத் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அசினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஜூலை மாதம் ஈழத் தமிழர்களுக்கு அரசு சார்பில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் நடிகை அசின் பங்கேற்றதுடன், முழு செலவையும் ஏற்றார். இதுபோன்ற முகாம்களை இனி தானே முன்னின்று நடத்துவதாகவும் அறிவித்தார்.
இந்த கண் சிகிச்சை முகாமில் 300 ஈழத் தமிழர்களுக்கு கண் சிகிச்சை செய்யப்பட்டது. லென்ஸ் வாங்கியதிலிருந்து அனைத்து செலவுகளையும் அசின்தான் ஏற்றார். ஆனால் கண் சிகிச்சை பெற்ற 10 தமிழர்கள் பார்வை பாதிக்கப்பட்டது. பலருக்கு பார்வை பறிபோகும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடந்து நடிகை அசின் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் நோட்டீசு அனுப்பபட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர்அணி பொது செயலாளர் ராம்நகர் குருமூர்த்தி நடிகைஅசினுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், "இலங்கையில் அரசு சார்பில் ஏற்பாடு செய்த கண் சிகிச்சை முகாமில் 300 க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான செலவை நீங்கள்தான் (அசின்) ஏற்றீர்கள். கண் சிகிச்சை செய்த 10 பேருக்கு கண்பார்வை பறிபோய்விட்டது. அவர்களுக்கு கண்ணில் தவறான லென்ஸ் பொருத்தப்பட்டதால் கண் பார்வை போய்விட்டது. மேலும் பலருக்கு கண் பார்வை போகும் நிலை உள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டதால் நடிகை அசின் ஈழத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பாதிக்கப் பட்டவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். இன்னும் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடருவோம்..." என்று கூறியுள்ளார்.
சாமி சிலையை அவமதித்ததாக குஷ்பு மீது வழக்குத் தொடர்ந்தவர்தான் இந்த ராம்நகர் குருமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’