ஆபாசப் படங்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட இறுவெட்டுகள் மற்றும் இறுவெட்டுகளை பிரதி பண்ண பயன்படுத்தப்பட்ட கணினி என்பவற்றுடன் நான்கு சந்தேக நபர்கள் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை சிலாபம் நகரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், குறித்த சீடிக்களும், கணினியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆபாசப் படங்கள் அடங்கிய சீடிக்கள் விற்பதாகவும், வாடகைக்கு வழங்குவதாகவும் கிடைத்த தகவலையடுத்தே குறித்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’