வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 29 அக்டோபர், 2010

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது நடவடிக்கை காரணமாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றம் இரத்து!

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு குருகுலராஜாவின் திடீர் இடமாற்றம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது நடவடிக்கை காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கிளிநொச்சி மாவட்டத்தில் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜாவின் உடனடி இடமாற்றத்தினை பரிசீலிக்க வேண்டுமெனக் கோரி வலயக் கல்வி அலுவலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் நேற்று மனுவொன்றினை நேரில் கையளித்திருந்தனர்.
மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்வி மீள்கட்டுமானம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கடந்த கால அர்ப்பணிப்பு மிக்கதான அவருடைய சேவையினையும் கருத்தில் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடியிருந்தார்.
அதற்கமைவாக ஆளுநர் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படாத வகையிலும் வலயக் கல்விப் பணிமனையின் நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக மேற்படி வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’