இனந்தெரியாத பெண் ஒருவரின் உருக்குலைந்த சடலம் இன்று புதன்கிழமை பிற்பகல், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாடு எனும் பிரதேசத்தின் கடலோரத்தில் கரையொதுங்கியுள்ளது.
உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலத்தை இன்று பிற்பகல் 2 மணியளவில் அப்பிரதேச மீனவர்கள் கண்டதனைத் தொடர்ந்து, முந்தல் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தலை இல்லாமலும், ஒரு கால் மற்றும் ஒரு கை என்பன இல்லாமலும் உருக்குலைந்து காணப்பட்ட சடலத்தினை அவ்விடத்திற்கு உடனடியாக விஜயம் செய்த புத்தளம் மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய எஸ்.டி.எச்.எம்.சேசிரி ஹேரத் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோனைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்புமாறு முந்தல் பொலிஸாரை பணித்தார்.
உருக்குலைந்த பெண்ணில் சடலம் இதுவரை இனம்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’