வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 20 அக்டோபர், 2010

வெளிநாட்டுக்கு அகதிகளை அனுப்ப முயன்ற வழக்கில் நால்வர் கைது:ஒருவர் சரண்

வெளிநாட்டுக்கு இலங்கை அகதிகளை அனுப்ப முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் பொலிசில் சரணடைந்துள்ளார்.

புதுச்சேரி தேங்காய்த் திட்டு துறைமுகத்திலிருந்து விசைப் படகு மூலம் இலங்கை அகதிகளை வெளிநாட்டுக்கு அனுப்ப முயன்றது தொடர்பாக, புதுச்சேரியைச் சேர்ந்த நால்வரை சி.ஐ.டி. பொலிசார் கைது செய்தனர்.
மேலும், படகுக்கான டீசலை மறைத்து வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட காரைக்கால் பா.ம.க., மாவட்ட செயலர் தேவமணியை, பொலிசார் இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இரண்டாம் நாளாக நேற்று நடந்த விசாரணையில், டீசலை மறைத்து வைத்ததை தேவமணி ஒப்புக் கொண்டார். டீசல் விற்ற பணம் 15 ஆயிரம் ரூபாவை அவரிடமிருந்து பொலிசார் பறிமுதல் செய்தனர்.
தேவமணி, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தேவமணிக்கு உடந்தையாக இருந்த திருநள்ளாரைச் சேர்ந்த பாலகுரு சி.ஐ.டி., பொலிசாரிடம் நேற்று சரணடைந்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’