வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 20 அக்டோபர், 2010

யாழ் ஊர்காவற்துறை கரம்பொன் சண்முகநாதன் மகா வித்தியாலயத்தின் ஸ்தாபகர் தினமும் பரிசளிப்பு விழாவும்

ன்முகப்படுத்தப்படவுள்ள நிதியிலிருந்து இந்தப் பாடசாலைக்கான பொது மண்டபம் புனரமைக்கப்படுவதுடன் பாடசாலையின் ஏனைய தேவைகளும் கவனத்தில் கொள்ளப்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (18) யாழ் ஊர்காவற்துறை கரம்பொன் சண்முகநாதன் மகா வித்தியாலயத்தின் ஸ்தாபகர் தவத்திரு மகாதேவா சுவாமிகள் நினைவுதினம் மற்றும் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அதிலும் ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் பாதுகாப்புடனும் வழிநடத்தலுடனும் மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இந்தப் பாடசாலையின் பிரதான மண்டபம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் திருத்தம் செய்ய வேண்டிய நிலையிலுள்ளது.

இந்த மண்டபம் திருத்தம் செய்யப்பட வேண்டுமென்ற பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு அமைவாகவும் மாணவ சமுதாயத்தின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டும் அடுத்தாண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்படவுள்ள நிதியிலிருந்து பாடசாலையின் பிரதான மண்டபத்தை நிச்சயம் புனரமைக்கப்படும்.

அத்துடன் இங்கு கல்வி கற்கின்ற மாணவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு யாழ் மாவட்டத்திற்கு வெளியே சென்றுவரக் கூடியதாக சுற்றுலாப் பயணங்களுக்கும் ஏற்ற ஒழுங்குகள் செய்யப்படும். இந்தப் பாடசாலையை மட்டுமல்ல இந்தக் கிராமமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுமென்றும் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக கரம்பொன் முருகமூர்த்தி ஆலய முன்றலிருந்து விருந்தினர்கள் பாடசாலைச் சமூகத்தினரால் மாலை அணிவிக்கப்பட்டு மாணவர்களின் பான்ட் அணி வகுப்புடன் பிரதான வீதியூடாக பாடசாலையைச் சென்றடைந்தது.

அங்கு வைக்கப்பட்டிருந்த பாடசாலை ஸ்தாபகர் தவத்திரு மகாதேவா சுவாமிகளின் உருவப்படத்திற்கு விருந்தினர்கள் மலர் வணக்கம் செய்து தொடர்ந்து பாடசாலை அதிபர் தேவராசா தலைமையில் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

முதலில் பிரதம விருந்தினர் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் சிறப்பு விருந்தினர் ஈ.பி.டி.பி. யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) ஆகியோருக்கு பாடசாலைச் சமூகம் சார்பில் அதிபர் தேவராசா பொன்னாடை போர்த்தியதுடன் நினைவுக் கேடயத்தையும் வழங்கி வைத்தார்.

தொடர்ந்து பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தண்ணீர் தாங்கிக்கான திறப்பை பழைய மாணவர் சங்க கனடாக் கிளை இணைப்பாளரும் யாழ அன்னை புத்தகசாலை உரிமையாளருமான விஜிதரன் பாடசாலை அதிபரிடம் கையளிக்க பெயர்ப்பலகையினை கமலேந்திரன் திரைநீக்கம் செய்து வைக்க சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் அவர்கள் மின் அழுத்தியை அழுத்தி கொள்கலனுக்கான நீர்ப்பம்பியின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் பாடசாலையின் கல்வி விளையாட்டுத் துறைகளில் சாதித்த மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வையும் விருந்தினர்கள் சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைத்தனர்.

தொடர்ந்து மண்டப நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களின் உரையும் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. 1917ம் ஆண்டு மகாதேவா சுவாமிகளால் தொடக்கப்பட்ட இப்பாடசாலையின் 93வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’