வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 13 அக்டோபர், 2010

வவுணதீவில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி

ட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள காயான்காடு கிராமத்தில் இன்று புதன்கிழமை காலை பெரும்போக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த (70 வயது) விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் பலியாகியுள்ளார்.

புதுமண்டபத்தடி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட காயான் காட்டுக் கிராமத்தில் உள்ள ஒரு குளத்திற்கருகாமையில் பெரும்போக விவசாய செய்கைக்காக வரம்பு கட்டிக்கொண்டிருந்தபோது காலை 6.30 மணியளவில் காட்டுப்பகுதியில் இருந்து வந்த யானை தாக்கியதிலே இவர் பலியானார்.
கிருஷ்ணபிள்ளை கனகசபை என்ற விவசாயியே யானை தாக்கி பலியானவர் ஆவார்.
படுவான்கரைப் பகுதியில் உள்ள மக்கள் கடந்த யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து நகர்ப் பகுதியை அடைந்த நிலையில் அப்பகுதி வீடுகளில் இருந்து நெல் மற்றும் தானிய வகைகளை உண்பதற்காக காட்டுப் பகுதியில் இருந்து யானைகள் வந்து அப்பகுதி குடிமனைப் பகுதிகளையும் பயிர்களையும் சேதப்படுத்தியிருந்தது.
தற்போது மக்கள் மீள்குடியேறிய நிலையில் அப்பகுதிக்கு வந்து பழக்கப்பட்ட யானைகள் தொடர்ந்தும் அப்பகுதியை நாடுவதால் பயிர்கள் குடிமனைகள் சேதமாக்கப்படுவதுடன் உயிர்களும் காவு கொள்ளப்படுகின்றன.
தொடர்ச்சியாக வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் வெற்றியளிக்காத நிலையில் அப்பகுதியில் பல உயிர்கள் பலியாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’