வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 13 அக்டோபர், 2010

சுரங்கத் தொழிலாளர்கள் மீட்பு வீடியோ இணைப்பு

இரண்டு மாதங்களுக்கும் மேலாக பூமிக்கு அடியில் தென் அமெரிக்க சுரங்கத்தில் சிக்கியிருந்த 33 சுரங்கத் தொழிலாளர்களில் 17 பேர் லண்டன் நேரம் மாலை ஆறு மணி வரை மீட்கப்பட்டுள்ளனர்.

வடக்கு சிலியில் உள்ள சான் ஜோஸ் சுரங்கத்தில் நேற்று இரவு ஆரம்பிக்கப்பட்ட மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
சிக்குண்டவர்களில் வயதில் மிகவும் இளையவரும், வயதில் மிகவும் மூத்தவரும் மீட்கப்பட்டவர்களில் அடங்குவர். சுரங்கத்தில் இருந்து இவர்கள் மீட்கப்பட்டு வெளியே வந்த சமயம் அங்கு கூடியிருந்தவர்கள் ஆரவாரம் செய்து தமது மகிழ்சியை வெளிப்படுத்தினர்.
மீட்கப்பட்டவர்கள் எவ்வித உடல் நல பாதிப்புமின்றி இருப்பதாக சிலி நாட்டின் சுகாதார அமைச்சர் ஜெமி மனாலிச் தெரிவித்ததுள்ளார்.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் அருகே இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
இவர்கள் மீட்கப்படுவதை நேரடியாக ஒளிபரப்பும் நோக்கில் ஏராளமான தொலைக்காட்சி செய்தியாளர்கள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’